Home CINEMA NEWS 19 மொழிகளில் பாடிய பிரபல பாடகி மரணம் …!!அதிர்ச்சியில் திரையுலகம்.!!

19 மொழிகளில் பாடிய பிரபல பாடகி மரணம் …!!அதிர்ச்சியில் திரையுலகம்.!!

இசையையும் ரசிகர்களையும் என்றுமே பிரிக்க முடியாது இசையோடு இணைந்ததுதான் அனைத்தும். தன் குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராமன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல் பாடி உள்ளார்.

எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ .ஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபல இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய வாணி ஜெயராமன், பல விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் மல்லிகை என் மன்னன் மயக்கும், என பல பாடல்களை பாடியுள்ளார். இவர் கடைசியாக தமிழில் ஆர். ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி படத்தில் தமிழ் தாய் வாழ்த்து ஆன்தம் பாடலை பாடியுள்ளார்.

இந்த வருடம் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை இவர் குடியரசுத் தேதி தினத்தன்று வாங்குவதாகவும் இருந்தது. இவ்வளவு புகழ்பெற்ற வாணி ஜெயராமன் இன்று காலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இவர் இறப்பை பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் வாணி ஜெயராமனுக்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version