Home CINEMA NEWS சாலை விபத்தில் சிக்கி பரிதாப நிலையில் இருக்கும் பிரபல நடிகர்…!!! சோகத்தில் ரசிகர்கள்.

சாலை விபத்தில் சிக்கி பரிதாப நிலையில் இருக்கும் பிரபல நடிகர்…!!! சோகத்தில் ரசிகர்கள்.

tej

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரன் தேஜ். தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நேற்று அவர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பிரிட்ஜில் மின்னல் வேகத்தில் சென்றார். அப்போது திடீரென்று பைக் ரோட்டில் கவிழ்ந்தது.

அதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாய் தரன் தேஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடுமையான வலியால் துடித்த அவர் மயக்கமடைந்தார் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இன்னும் அவருக்கு நினைவு திரும்பவில்லை என்றும் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் அவரை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இதனை அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version