Home CINEMA NEWS பிரபல நடிகர் ஐசியூ-வில் அனுமதி…!!! உடல்நிலை கவலைக்கிடம்..

பிரபல நடிகர் ஐசியூ-வில் அனுமதி…!!! உடல்நிலை கவலைக்கிடம்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் ஒருவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சரத்பாபு அண்ணாமலை மற்றும் முத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இவரின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உடல் நலக்குறைவு காரணமாக செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரின் உடல்நிலை குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version