Home NEWS ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தை தூண்டியவரின் தாய் ஜெயந்தி ..! முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால்...

ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தை தூண்டியவரின் தாய் ஜெயந்தி ..! முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்..!

நவீன் என்னும் நபரின் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு காரணமாக பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். நிலையில் பேஸ்புக் பதிவை எழுதிய நவீன சீனிவாசன் சகோதரியுமான ஜெய்ஹிந்த் அவர்கள் பேசுகையில் “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை நானும் என் மகளும் வீட்டில் டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தோம் அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்க்கும் போது 50க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டின் நுழைவு வாயில் உடைத்து உள்ளே நுழைய முயன்ற போது ,நாங்கள் அனைவரும் உள்பக்கமாக பூட்டுப்போட்டுக்கொண்டு பேரப்பிள்ளைகளை தூக்கிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். இருசக்கர வாகனம் வீட்டுப் பொருட்கள் தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

அந்த சமயத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெயந்தி .உயிர்பிழைக்க செய்த முஸ்லீம் இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.எங்கள் அனைவரின் உயிரை காப்பாற்றி காரில் ஏற்றிவிட்ட அந்த இளைஞர்களை பார்த்த கலவர கும்பல், நீங்கள் மதத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

ஒரு முகநூல் பதிவுக்காக ஊரில் உள்ள அப்பாவி பொதுமக்களை தாக்கி, அவர்களின் உடைமைகளை எரிப்பதற்கு அவர் யார்? அரசியல் ரீதியாக என் தம்பி அகண்ட சீனிவாச மூர்த்தியை அழிக்கும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரத்தை செய்திருக்கிறார்கள். போலீஸார் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version