Home NEWS EPS என்ற சொல்லுக்கு புதிதாக விளக்கம் கொடுத்து அசத்திய அதிமுகவினர்..!!! வேற லெவெலில் யோசிக்கும் அதிமுக...

EPS என்ற சொல்லுக்கு புதிதாக விளக்கம் கொடுத்து அசத்திய அதிமுகவினர்..!!! வேற லெவெலில் யோசிக்கும் அதிமுக IT WING . யாரு சாமீ நீங்க..!!!

edappadi palanisami

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் கட்சித்தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்சி சின்னம் மற்றும் கட்சி செய்த சாதனைகளை விளம்பரப் பலகை மூலமும் இணைய விளம்பரங்கள் மூலமும் மக்களுக்கு தெரியப் படுத்தி வருகின்றனர்.

உதாரணத்திற்கு ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு என்று ஊர் முழுவதும் கடைகளுக்கு விளம்பரப் பலகைகள் வைத்து வருகின்றனர் அதே சமயம் அதிமுகவின் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று மற்றொரு பக்கம் விளம்பரப் பலகை வைத்து வருகின்றனர். தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கவர்ச்சிகரமான திட்டங்களை தீட்டி வருகின்றன.

9 10 11 தேர்வுகள் ரத்து என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அறிவிப்பால் செம குஷியில் இருக்கிறார்கள் மாணவ மாணவிகள். அதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என்று அதிரடி காட்டி வருகிறார் முதல்வர்.

EPS என்றால் அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி என்று தான் தெரியும் ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் EPS க்கு வித்தியாசமான அர்த்தம் ஒன்றை தெரிவித்து உள்ளனர் அதிமுகவினர். அது EPS என்றால் EVERY PERSON SUPPORT. இதனை பார்த்த இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version