Home NEWS தளபதி விஜயின் பிகில் படத்தை காட்டி 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…!!!

தளபதி விஜயின் பிகில் படத்தை காட்டி 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…!!!

Bigil

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தில் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார். அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் அவர்கள் வந்த போது பின்னால் உக்காந்து இருந்த சிறுவன் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்துவிட்டான்.

இதில் சிறுவனுக்கு நெற்றி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இப்படித்தான் உடனே அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனுக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால் சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்கு டாக்டர்கள் முயன்றனர். ஆனால் சிறுவன் வயதில் ஊசி போட வேண்டாம் என அடம்பிடித்து சிகிச்சைக்கு ஒத்துழைக்க வில்லை. எவ்வளவோ முயன்றும் சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர்.

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து உனக்கு என்ன பிடிக்கும் என்ன சிறுவனிடம் கேட்டார். அதற்கு சிறுவன் தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வழியில் அழுது கொண்டே கூறினான். மேலும் விஜய்யின் படங்கள் பாடல்கள் வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடம் தெரியும் என்று காயம் ஏற்பட்ட வலி வேதனையிலும் நடிகர் விஜய்யை பற்றி சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டே இருந்தான்.

அப்போது அவர் தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக் கொண்டு உற்சாக மிகுதியில் உடலில் ரத்தம் வழிந்த நிலையிலும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேளையில் டாக்டர்கள் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க விஜய்யின் பிகில் படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version