Home CINEMA NEWS விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்துக்கு நிகரான நடிகர் யார் தெரியுமா …?

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்துக்கு நிகரான நடிகர் யார் தெரியுமா …?

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதை பிடித்திருந்தால் அடுத்தடுத்து விக்னேஷ் சிவனுக்கு பெரிய நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் போது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டு அந்த காதல் தற்பொழுது திருமணம் வரை சென்று விட்டது. இப்பொழுது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பும் நயன்தாரா படம் வேலைகளில் பிஸியாக இருக்க விக்னேஷ்சிவனும் படம் இயக்குவதில் மும்மரமாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் அஜித் நடித்த துணிவு படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகி தற்பொழுது தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பதற்கு விக்னேஷ் சிவனை புக் செய்து இருந்தார்.

லைகா இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அஜித் விக்னேஷ் அவனை ரிஜெக்ட் செய்துவிட்டார் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், இதனால் விக்னேஷ் சிவன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியின் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல், நானும் ரவுடிதான் என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கண்டிப்பாக இயக்கப் போகும் படமும் பெரும் வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் .

Exit mobile version