Home NEWS விஜய் பாடல் ஒலிக்க 30 வயது இளைஞனை போல ஸ்டாலின் சைக்கிள் பயணம் வீடியோ...

விஜய் பாடல் ஒலிக்க 30 வயது இளைஞனை போல ஸ்டாலின் சைக்கிள் பயணம் வீடியோ இதோ ..!!!

thalapathy vijay stalin

ஸ்டாலின், திமுக கட்சியை வழிநடத்தி செல்லும் ஒரு தலைவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரே ரத்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் என்ற படத்தை தயாரித்தார். அதன் பின் சினிமாவை விட்டு விலகி தனது நாட்டத்தை முழுவதுமாக கட்சியின் வளர்ச்சிக்காக செலுத்தி வந்தார்.

தனது தந்தையுடன் துணை நின்று கட்சியை வழி நடத்தினார். அதன்பின் கலைஞர் அவர்கள் கட்சியின் நிர்வாகம் அனைத்தையும் தனது மகன் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். தேர்தல் நேரத்தில் களத்தில் இறங்கி தனிக்கட்சி காக சூறாவளி பிரச்சாரம் செய்வார்.

கலைஞர் அவர்களின் மறைவிற்கு பிறகு திமுக கட்சியினை தலைமை ஏற்றார். ஸ்டாலினின் மகன் முதலில் தயாரிப்பாளராக சினிமா துறையில் அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். மக்கள் அடையாளம் காணப்படும் நடிகராக மாறிய அவர் தனது தாத்தா இறந்ததற்குப் பிறகு திமுகவில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பை ஏற்று தற்பொழுது அவரும் அரசியலில் இறங்கி உள்ளார்.

தற்பொழுது ஸ்டாலின் அவர்கள் சைக்கிளில் போகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் உலாவி வருகிறது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங் பயிற்சி சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ அருந்தியவர் பொதுமக்களிடம் அன்பாக பேசினாராம் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ விஜயின் பாடல் ஒலிக்க தளபதி ஸ்டாலின் சைக்ளிங் செல்வது போல இருந்தது இதனை TRB ராஜா அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.

Exit mobile version