Home NEWS 30 வயது இளைஞர் போல ட்ஷிர்ட் அணிந்து சைக்ளிங் செய்யும் திமுக தலைவர்...

30 வயது இளைஞர் போல ட்ஷிர்ட் அணிந்து சைக்ளிங் செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின். டீ-ஷிர்ட்டை கவனித்தீர்களா…!!!

dmk leader baan neet tshirt

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் சைக்கிளிங் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வார இறுதியில் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் 30 வயது இளைஞரைப் போல TSHIRT ஒன்றை மாற்றிக் கொண்டு சுறுசுறுப்பாக சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஸ்டாலின் சைக்கிளிங் செல்லும் போது ஏதாவது வாசகங்கள் எழுதிய T -ஷர்ட் போட்டுக் கொண்டு செல்வார். புகைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர் டீசர்ட்டில் என்ன வாசகம் எழுதி உள்ளது என்பதை அனைவரும் கவனிப்பார்கள். அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படத்தில் நீட் தேர்வு தடை செய்யக்கோரி “BAN NEET ” என்ற வாசகம் பொருந்திய கருப்பு நிற டீசர்ட் அணிந்து சைக்கிளிங் செய்துள்ளார்.

இதற்கு முன் “தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் எழுதிய டீசர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

Exit mobile version