Home NEWS திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்க வேண்டாம் – இபிஎஸ்,ஓபிஎஸ் அறிக்கை.

திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்க வேண்டாம் – இபிஎஸ்,ஓபிஎஸ் அறிக்கை.

ADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக ரூபாய் 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதோடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டு உள்ளதாக பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வேலுமணி சொந்தமான 55 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக அமைச்சர்கள் அனைவருமே பதற்றத்தில் இருந்து வருகின்றனர் அதை தொடர்ந்து இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர்,கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடா முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள்.

ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்துவதாக வரும் செய்திகள் மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு கழக அவர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன. துடிப்பான கழக செயல் வீரர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறோம்.

கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் ஆதாரம் எதுவுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது. இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும் அன்பு வழியிலும் அறவழியிலும் அரசியல் தொண்டாற்றும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version