Home NEWS பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தேமுதிக கட்சி பிரேமாலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்ட…!!! மூச்சடைக்க ஓடி...

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தேமுதிக கட்சி பிரேமாலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்ட…!!! மூச்சடைக்க ஓடி வந்த தொண்டர்கள்…!!!

Premalatha vijaykanth

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து இன்று தேமுதிக கட்சி சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை மண்ணடியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சைக்கிளில் பயணம் செய்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்றம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த பிரேமலதா பெட்ரோல், டீசல், விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் போன்றவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் பெட்ரோல்,டீசல் விலை அதிகமான விலைக்கு விற்பதில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.

அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களை மத்திய,மாநில அரசுகளை காக்கவேண்டிய நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Exit mobile version