Home NEWS தவறான தகவலை மறுத்து, SOS செயலியின் புதிய அறிவிப்பினை வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு…!!!

தவறான தகவலை மறுத்து, SOS செயலியின் புதிய அறிவிப்பினை வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு…!!!

sylendra-babu

பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக காவலன் SOS செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பெண்கள் தனியாக ஆட்டோவிலோ, கார்களில் பயணம் செய்யும்முன் அந்த வாகனத்தின் பதிவு என்னை 9969777888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள் காவல்துறை அந்த வாகனத்தை ஜிபிஆர்எஸ் வாயிலாக கண்காணிக்கும் இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற தகவல் தவறானது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக காவலன் SOS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்துவதன் வாயிலாக தங்களுடைய இருப்பிடம் ஜிபிஆர்எஸ் வாயிலாக அறிவிக்கப்பட்டு உடனடி சேவை வழங்கப்படும். இந்த செயலியில் உள்ள “ஷேக் ட்ரிக்கர்” வசதியை பயன்படுத்தும் காவல்துறையின் உதவியை பெற இயலும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version