Home NEWS தினக்கூலி டூ Youtuber வரை மாதம் லச்சக்கணக்கில் சம்பாதிக்கும் மலைவாழ் பகுதி இளைஞன்…!!!

தினக்கூலி டூ Youtuber வரை மாதம் லச்சக்கணக்கில் சம்பாதிக்கும் மலைவாழ் பகுதி இளைஞன்…!!!

Isak Mudda

தினக்கூலியாக இருந்த வேலையை இழந்த ஒடிசாவை சேர்ந்த ஒருவர் யூடியூப் சமூக வலைதளம் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். ஒடிசா மாநிலத்தில் சம்பல்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐசக் முண்டா. தினக் கூலி தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் வருமானம் இல்லாமல் திண்டாடினார்.ஐசக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அந்தநேரத்தில் சமூகவலைத்தளங்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து வீடியோ ஒன்றைப் பார்த்தார்.

இதையடுத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டா. தட்டில் சாதம், சாம்பார், மிளகாய், தக்காளி வைத்து அதை எப்படி சாப்பிட வேண்டும் என அவர் கூறும் அந்த வீடியோவை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதன் பின் உணவு வகைகளை சமைப்பது, சாப்பிடுவது தொடர்பான பல வீடியோக்களை அவர் வெளியிட்ட துவங்கினார். யூடியூபில் அவரை ஏழு லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடந்த ஆண்டு மார்ச்சில் துவங்கிய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் யூடியூப் நிறுவனத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வந்தது. சொந்த வீடு, வட்டி கடன்களை அடைத்த அவருக்கு தற்போது வருமானம் கொட்டுகிறது. பணத்திற்காக மட்டும் இதை செய்யவில்லை. எங்களைப் போன்ற மலை வாழ் பகுதியினர் வீடுகளில் என்னென்ன உணவு சமைக்கப்படுகிறது என்பதையும் எங்கள் வாழ்க்கை முறையை மக்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பாகவும் இதை பயன்படுத்தினேன் என ஐசக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.மேலும் யூடியூப்பில் வரும் பணத்தை வைத்து புதிய வீடு கட்டிவருகிறார்.

Exit mobile version