Home NEWS கொரோனா என்ற பெயரில் ஏழு ஆண்டுக்கு முன்பே கடை வைத்த இளைஞர்..!!

கொரோனா என்ற பெயரில் ஏழு ஆண்டுக்கு முன்பே கடை வைத்த இளைஞர்..!!

கொரானா என்று கூறினாலே அனைவர் மனதிலும் முதலில் வருவது அச்சம்தான். அப்படி அனைவரையும் ஆட்டிப் படைத்துள்ளது கொரானா என்னும் கொடிய நோய்.

கொரானா என்ற பெயரில் வேறு ஏதாவது இதற்கு முன்பு வந்துள்ளதா என பலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் . அதுபோல தற்போது 7 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு இளைஞர் தனது கடைக்கு கொரானா என பெயர் வைத்துள்ளார் . இந்த தகவல் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கோட்டயம் என்ற பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு உபயோகப் பொருட்கள் கடை ஆரம்பித்தார் ஜார்ஜ் என்ற இளைஞர். தனது கடைக்கு கொரானா என்று பெயர் வைத்துள்ளார். கொரானா என்ற சொல்லுக்கு லத்தின் மொழியில் கிரீடம் என்று பொருள். இதனால் கிரீடம் போல் இந்த கடையின் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பெயரை வைத்ததாக உரிமையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

ஆனால் தற்பொழுது இந்த பெயர் உலகம் முழுவதும் பரவி விட்டதால் எனது கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கொரானா பெயர் வைத்த அந்த இளைஞருக்கு இந்த பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version