Home NEWS முதல்வர் படம் இல்லை விளம்பரம் இல்லை..!!! தமிழக அரசு முத்திரையுடன் நிவாரண தொகை கொடுத்து அசத்திய...

முதல்வர் படம் இல்லை விளம்பரம் இல்லை..!!! தமிழக அரசு முத்திரையுடன் நிவாரண தொகை கொடுத்து அசத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்..!!!

stalin corona relief fund 2000rs card

தமிழ்நாட்டில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக 4000 வழங்கப்படும் என்று தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

தற்பொழுது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு உடனே அதற்கான முதல் கையெழுத்தை ஆட்சியில் அமர்ந்தவுடன் போட்டிருந்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் இந்த மாதமே வழங்க உத்தரவிட்டார்.

இன்று 10 – 05 – 2021 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகைக்காண முதல் தவணையாக 2000 ரூபாய் தொகையை வழங்கும் அடையாளமாக 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த தொகை நியாய விலைக் கடைகள் மூலம் 15 – 05 – 2021 அன்று முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விநியோகிக்கப்படும்.

இதற்கான முன்னேற்பாடாக 10 – 05 – 2021 முதல் 12 – 5 – 2021 வரை மூன்று நாட்கள் நியாய விலைக்கடை பணியாளர்கள் வீடுதோறும் சென்று வினியோகிக்கப்படும் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொது மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொடுக்கப்பட்ட நிவாரணத்தொகை அட்டையில் எந்த ஒரு விளம்பரமும் இன்றி முதல்வர் படம் கூட இல்லாமல் இருந்தது. தமிழக அரசின் முத்திரை மட்டும் இடம் பெற்று இருந்தது.

Exit mobile version