Home NEWS தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி எங்கெல்லாம் உள்ளது என்பதை துல்லியமாக காட்டும் இணையத்தளம்..!!!

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி எங்கெல்லாம் உள்ளது என்பதை துல்லியமாக காட்டும் இணையத்தளம்..!!!

stop corona bed status

கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் ஊரடங்கு போன்ற விஷயங்களை அறிவுறுத்தி வருகிறது தமிழக அரசு.

டெல்லியில் கொரோனா நோயாளிகள் படும் அவஸ்தைகளை நாளுக்குநாள் ஊடகங்களில் பார்க்கும் பொழுது நோயாளிகள் படும் அவஸ்தை கண் கலங்க வைக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் எங்கெல்லாம் படுக்கை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எத்தனை பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் எத்தனை பேர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்க வைக்கப்படும் இடத்தில் எத்தனை படுக்கை வசதி உள்ளது என்பதை விவரமாக காட்டுகிறது இந்த இணையதளம்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை துல்லியமான தகவல்களை கொடுக்கிறது இந்த இணையதளம். அதுமட்டுமல்லாமல் இந்த இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் கொரோனா டெஸ்ட் எடுக்கிறார்கள் என்ற விவரத்தையும், மாதிரி சேகரிப்பு மையங்கள் விவரத்தையும் பதிவிட்டுள்ளனர்.

link: https://stopcorona.tn.gov.in/beds.php

Exit mobile version