Home NEWS கொரோனாவால் உயிர் இறந்தவர் உடலை இப்படியா அடக்கம் செய்வது பொங்கி எழுந்த ஆந்திரா முதல்வர். வீடியோ...

கொரோனாவால் உயிர் இறந்தவர் உடலை இப்படியா அடக்கம் செய்வது பொங்கி எழுந்த ஆந்திரா முதல்வர். வீடியோ உள்ளே.

கொரோனவினால் நாளுக்கு நாள் மக்கள் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரோனவினால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் நெஞ்சை உலுக்கும்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொரோனா நோய் அறிகுறியுடன்  வியாழக்கிழமை 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த முதியவரின் உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி அடக்கம் செய்வதற்காக JCP எந்திரத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றவர்கள் பாதுகாப்புக்காக PPE முகக்கவசம் அணிந்து சென்றார்கள். இந்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தை அறிந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் “இது மனிதநேயமற்ற செயல் என்றும், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களி இப்படி செய்யலாமா என்று கண்டித்து உள்ளார். அதன் பின் இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி “ஸ்ரீகாகுளத்தின் பலாசாவில் கோவிட்டின் உடல் ஜே.சி.பி. உடன் நகர்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனித நேயத்தை புண்படுத்தும் போது சிலர் செயல்பட்ட விதம். இது போன்ற நிகழ்வுகள் வேறு இடங்களில் மீண்டும் செய்யப்படக்கூடாது. பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்து கொண்டார்.

Exit mobile version