Home NEWS கொரோனா லாக்டவுன் BORE அடிக்கிறதா…? இது தான் சரியான நேரம் இந்த விஷயங்களை செஞ்சி...

கொரோனா லாக்டவுன் BORE அடிக்கிறதா…? இது தான் சரியான நேரம் இந்த விஷயங்களை செஞ்சி பாருங்க.

corona lockdown tips

கொரோனா உலகநாடுகளே அஞ்சும் ஒரே வைரஸ். நம் நாட்டில் கொரோனா தடுப்பு நடவெடிக்கைகள் சிறப்பான முறையில் அரசு செய்து வருகிறது. என்ன நல்லது செய்து இருக்கிறார்கள் வீட்டில் போட்டு அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கலாம் ஆனால் நாம் வீட்டில் இருப்பதினால் மட்டுமே இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருக்கிறது.

இந்த வைரஸின் தாக்கம் மற்ற நாட்டை காட்டிலும் இன்று நமது நாட்டில் குறைவாக இருப்பது என்றால் இந்த ஊரடங்கினால் தான். இந்த ஊரடங்கு நமது தொழில் , பொருளாதாரம் எல்லாம் சரிவு அடைந்தாலும். இது தான் நமக்கு சரியான நேரம் நம்மை தற்காத்து கொள்ளவும் நம்மை கொள்ளவும் .

காலை சீக்கிரம் எழும்புங்கள்

நாம் முன்னோர்கள் தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்து இருந்தனர். அதிகாலை எழுவதால் அந்த சுத்தமான காற்றை நாம் சுவாசிக்கும்போது நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அந்த காற்று நமது மனத்திற்கும் இதமாக இருக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும், மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நமது மூளையும் ஓய்வு எடுத்து சுறுசுறுப்புடன் இயங்கும் அந்த நேரத்தில் நாம் எது படித்தாலும், எது பார்த்தாலும் நமது நினைவில் இருக்கும். குழந்தைகள் படிக்க வேண்டிய நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை இந்த நேரத்தில் அவர்கள் படிக்கும் படிப்பு எளிதில் மனதில் பதியும்.

தண்ணீர் குடியுங்கள்

காலை எழுந்த உடன் ஒரு டம்ளர் தண்ணீராவது குடியுங்கள். உங்களது உள்ளுறுப்புகளை இயக்கம் செய்வதற்கு தண்ணீர் மிகவும் நல்லது. தண்ணீர் காலையில் அருந்துவது இருதய படபடப்பை தடுக்கும் மற்றும் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருக்கும்.

காலை உடற்பயிற்சி செய்யுங்கள்

காலையில் எழுந்து அந்த தூய்மையான காற்றை சுவாசித்து விட்டு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலில் உள்ள அணைத்து பாகங்களுக்கும் உடற்பயிற்சியினால் ரத்தம் பாயும். ரத்த ஓட்டம் ஒரு உடம்பில் சரியாக சீராக இருந்தால் நமது உடம்பிற்கு வியாதி என்பது இல்லை. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் FAST WALKING செல்லுங்கள். அது உங்களது உடலில் வியர்வையை அதிகப்படுத்தும் எவ்வளவு வியர்வை உங்களுக்கு வெளி வருகிறதோ அவ்வளவு உங்களுக்கு நல்லது தான். இருதய பிரச்சனை உள்ளவர்கள் FAST WALKING போக வேண்டாம் அவர்கள் மெதுவாக நடந்தால் போதும்.

எண்ணெய் தேய்த்து குளியுங்கள்

எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றி நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் அதன் பயனை சொல்லுவார்கள். எப்போதும் நமது உடல் வெப்பம் இருக்கவேண்டும் ஆனால் அதிகப்படியான வெப்பம் இருந்தால் அதுவே நமது உடலுக்கு பெரிய தீங்கை விளைவிக்கும். உடலை குளிச்சி படுத்த ஆண்கள் சனி கிழமையில் நல்லஎண்ணெய் தேய்த்து குளிர்ப்பது மிகவும் நல்லது. பெண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

சத்தான உணவினை சேருங்கள்

நாம் அடிக்கடி சாப்பிட கூடிய junk foods சுத்தமாக கொஞ்ச நாள் நிறுத்தி வையுங்கள். நாம் முன்னோர்கள் சாப்பிட சத்தான உணவான கம்பங்கூழ், கேழ்வரகு கூல் போன்றவற்றை வாரம் ஒருமுறையாவது அருந்துங்கள். வைட்டமின் மாத்திரைகளில் உள்ள சத்துக்கள் எந்த உணவில் எந்த வைட்டமின் இருக்கு என்று தெரிந்து கொண்டு அந்த உணவை எடுத்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத்துணையிடம் நேரம் ஒதுக்குங்கள்

குழந்தைகள் கடவுள் நமக்கு கொடுத்த பெரிய பொக்கிஷம். ஆனால் இன்று அந்த குழந்தைகளிடம் நாம் நேரம் செலவிடுவது பெரிய சவாலாக இருக்கிறது. குழந்தைகள் செய்யும் விஷயங்களை கூர்ந்து கவனியுங்கள், நல்ல தன்னம்பிக்கை தர கூடிய கதைகளை சொல்லுங்கள், அவர்களுடன் விளையாடுங்கள். நீங்கள் விதைக்கும் விதை தான் நாளை செடியாக வளர்கிறது.

வாழ்க்கை துணையிடம் நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் வாழ்க்கைத்துணையிடம் மனம் விட்டு பேச இதனை ஒரு வாய்ப்பாக வைத்து கொள்ளுங்கள். பேசினால் தான் பிரச்சனை வரும் என்று பேசாமல் இருக்காதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உக்காந்து பொறுமையாக பேசி பாருங்கள் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தூக்கம் ரொம்ப முக்கியம்

இரவு நேரத்தில் 8 மணி அளவில் இரவு உணவினை எடுத்து கொண்டு இரவு 10 மணி அளவில் தூங்க செல்லுங்கள். தூக்கம் தான் பல வியாதிகளுக்கு சிறந்த மருந்து. ஒருவருக்கு தூக்கம் சரி இல்லை என்றால் நாளடைவில் அது மூளை வரை பாதிக்கும். சரியான நேரத்தில் தூங்குவதால் நமது உடலில் உள்ள உறுப்புகள் ஓய்வு பெறும், முளைக்கும் ஓய்வு கிடைக்கும் . நமது depression மற்றும் stress போன்றவதில் விடுப்பட தூக்கம் முக்கியம். நாம் சரியாக தூங்கி எழுந்தால் நாம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

முடிந்தால் இதனை செய்து பாருங்கள் ஒரு சிறு மாற்றதை உங்களிடம் காண்பீர்கள்.

Exit mobile version