Home CINEMA NEWS குக் வித் கோமாளி மணிமேகலையின் விலைஉயர்ந்த பைக் திருட்டு…!!! கஷ்டப்பட்டு வாங்கிய பைக் என பதிவில்...

குக் வித் கோமாளி மணிமேகலையின் விலைஉயர்ந்த பைக் திருட்டு…!!! கஷ்டப்பட்டு வாங்கிய பைக் என பதிவில் உருக்கம்.

manimegalai

சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மணிமேகலை இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.

விஜய் டிவியில் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 2 உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களிலும் மணிமேகலை கோமாளியாக இடம்பெற்ற ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது மணிமேகலை சமூகவலைத்தள பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கேடிஎம் பைக் திருடு போய்விட்டதாக பதிவில் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு அந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாகவும் பதிவில் தெரிவித்திருந்தார்.

மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த் என்பவருடைய வீடு அசோக் நகரில் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அரவிந்த் வாகனத்தை வந்திருக்கிறார்.

அந்த நிலையில் வீடு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டது. மேலும் காவல் துறையினரிடம் மணிமேகலை புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version