Home CINEMA NEWS அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தை பார்த்த ஷகீலா..!!! அஸ்வின் தமிழ்நாட்டிற்கே செல்ல பிள்ளை ஷகீலா...

அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தை பார்த்த ஷகீலா..!!! அஸ்வின் தமிழ்நாட்டிற்கே செல்ல பிள்ளை ஷகீலா பெருமிதம்.

ashwinkumar enna solla pogirai shakeela appreciation

என்ன சொல்லப் போகிறாய் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்து அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படம். காரணம் இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் அஸ்வின் அவர்கள் 40 கதை கேட்டேன் தூக்கம் வந்துவிட்டது ஆனால் இந்த கதை கேட்டேன் எனக்கு தூக்கம் வரவில்லை அதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று பேசி பலரது வெறுப்பை சம்பாதித்தார்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்ற அஸ்வின் இந்த மேடைப் பேச்சின் மூலம் பல தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பை சந்தித்தார். ரசிகர்களும் 40 இயக்குனர்கள் கதையை உதாசீனப்படுத்தி பேசுறிங்களே 40 இயக்குனர்கள் ஒரு கதை எழுதுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா அவர்களின் உழைப்பை இப்படி பேசலாமா என்று அஸ்வின் அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தனர்.

அஸ்வின் சில நாட்களுக்குப்பிறகு வாடிய முகத்துடன் நான் அந்த மேடைப்பேச்சில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் என்னை மீறி உளறி விட்டேன் ஏதோ உளறுகிறேன் என்று தெரிந்தது. பிரஸ்மீட்டில் என்னுடைய பேச்சு புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.

என்ன சொல்ல போகிறாய் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசானது காலையிலேய தியேட்டருக்கு படம் பார்க்க வந்த அஸ்வின் அனைவரையும் பார்த்து கண் கலங்கினார் அஸ்வின். அவர்களுக்கு லேடிஸ் FANS அதிகம் என்பதால் படத்தை பார்க்க வந்த சில ரசிகர்கள் அஸ்வின் அஸ்வின் என்று குரல் கொடுத்தார்கள். படம் அருமையாக உள்ளது அஸ்வின் நடிப்பு செமையாக உள்ளது என்றெல்லாம் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தனர். அந்த காட்சிக்கு அடுத்தடுத்த காட்சிகளில் தியேட்டரில் படம் எப்படி ஓடுகிறது என்று சென்று விசாரித்த போது தான் தெரிந்தது படம் பார்க்க 20 பேராவது வர வேண்டும் அப்போது தான் ஒரு ஷோ ஓட்ட முடியும் ஐந்து பேருக்காக திரையரங்கில் ஒரு ஷோ ஓட்ட முடியுமா என்று பல தியேட்டர்களில் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தை கேன்சல் செய்துள்ளார்கள் திரையரங்க உரிமையாளர்கள். படத்தைப் பார்த்த சிலர் இந்த கதையைக் கேட்டா பா தூங்காம இருந்தா நாங்க பணம் கொடுத்து தூங்குறதுக்கு படத்தை எடுத்து வச்சிருக்கீங்க என்று விமர்சித்து வந்தனர்.

பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ஏண்டா இந்த படத்தை பார்த்தோம் ஏன் இப்படி படத்தை எடுத்து வச்சிருக்கீங்க தயாரிப்பாளர் காசுல விளையாடாதீங்க என்று படத்தை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டார். ரிவ்யூ தான் இப்படி இருக்கு மக்கள் கருத்து என்ன என்று படத்தைப் பார்த்த மக்களிடம் கேட்டால் என்ன சொல்லப் போகிறாய் படம் எப்படி இருக்கு என்று கேட்டால் என்னத்த சொல்றது போங்க என்று சொல்லிக்கிட்டு போறாங்க.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ஹீரோ அஸ்வின் அவர்களிடம் படத்தின் ரிலீஸ் பற்றி கேட்டதற்கு படம் ரிலீஸானது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக்காக இவ்வளவு பேர் சப்போர்ட் பண்ற பார்த்து எனக்கு சந்தோசமா இருக்கு இந்த படத்தை பொறுத்தவரைக்கும் ஏதாவது ஒரு விஷயம் ஏதாவது ஒரு ஆடியன்சை கண்டிப்பாக கவரும். சாங் சில பேருக்கு பிடிக்கலாம் சில பேருக்கு கதை பிடிக்கலாம் சில பேருக்கு ஆக்டிங் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார் அதனைத் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீங்க என்று கேட்டதற்கு எல்லா படத்திற்கும் வர தான் தான் செய்யும் என்று கூறி விட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.

பிரபல நடிகை சகிலா அவர்கள் படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை அஸ்வின் எனக்கு மட்டும் பிள்ளை இல்ல தமிழ்நாட்டுக்கு பிள்ளை அவனைச் சாக்லேட் பாய், அழகன் என்றெல்லாம் கூறுகிறார்கள். சூப்பரா படத்தில் நடிச்சுருக்கான். நானும் நிறைய லவ் பண்ணதால படத்தின் கதை பிடிச்சி இருந்திச்சி. இந்த படத்தில் நடித்த ஹீரோயின் நல்லா நடிச்சு இருக்காங்க அழகா இருக்காங்க அஸ்வின் ஒவ்வொரு பிரேமிலும் அழகா இருக்கான் புகழுக்கு தீனி பத்தல. படம் சூப்பரா இருக்கு என்று கூறியுள்ளார்.

Exit mobile version