Home NEWS வெள்ளம் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!

வெள்ளம் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!

m.k.stalin

கன மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

மேலும் அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

பின்னர் வரதராஜபுரம் ஊராட்சி வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆகியோரை தேசிய பேரிடர் வேளாண்மை மாநில பேரிடர் மேலாண்மை மையம் தீயணைப்பு மற்றும் காவல்துறை ஆகியோர் மூலமாக பைபர் படகுகளில் பாதுகாப்பான ஈர்க்கப்பட்டு அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளை உணவும் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது உள்ள 25 முகாம்களில் சுமார் 930 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி உட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தாம்பரம் மாநகராட்சி வாணியன் குளம் இரும்பு புலியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வரும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து விவரங்களை அதிகாரிகளுடன் முதலமைச்சர் கேட்டறிந்தார் மாநகராட்சி குட்வல் நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Exit mobile version