Home NEWS பிரபல துணிக்கடையில் குவிந்த மக்கள் கூட்டம்..!!! கொரோனவை துரத்தி அடிக்க படை எடுத்த சென்னை மக்கள்..!!!...

பிரபல துணிக்கடையில் குவிந்த மக்கள் கூட்டம்..!!! கொரோனவை துரத்தி அடிக்க படை எடுத்த சென்னை மக்கள்..!!! வீடியோ உள்ளே.

deepavali-shopping-in-kumaran-stores

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த 6 மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதம் சற்று குறைவாக உள்ளது. ஆனாலும் தமிழக அரசு அக்டோபர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்னும் பல தளர்வுகளை அறிவித்ததால் மக்கள் வெளியில் அதிகமாக நாமாட தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்துகளும் இயங்க தொடங்கி விட்டது. இதனால் முன்பிருந்த பழைய நிலையே திரும்பி வந்துள்ளது.

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறியதுதான் கூறினார்கள் மக்கள் அதைப் பற்றி சற்றும் அச்சம் இல்லாமல் வெளியில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர். இன்றளவும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு ஷாப்பிங் மால்கள், கடைகள், ஹோட்டல்கள் ஆகிய அனைத்தையும் திறக்கலாம் அதற்கு ஒரு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதில் பல கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது. முக்கியமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் கூறிவந்தனர். இந்த நிலையில் சென்னை ஒரு பிரபல துணிக்கடையில் சலுகைக்கு துணிகளை அறிவித்திருந்த நிலையில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. சமூக இடைவெளியை பற்றி சற்றும் யோசிக்காமல் மக்கள் கூட்டம் துணிக்கடையில் அலைமோத தொடங்கிவிட்டனர்.

துணிக்கடை உரிமையாளர்களோ மேலாளார்களோ சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தவும் இல்லை. இதனை நேற்று அந்த வீடியோ வெளியாகி ணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அந்த கடைக்கு சென்னை கார்ப்பரேஷன் சீல் வைத்துள்ளது.

Exit mobile version