Home CINEMA NEWS ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் ரோப் இல்லாமல் டூப் போடாமல் நடித்த விஜயகாந்த்…!!! பல வருடங்களுக்கு பிறகு வெளியான...

ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் ரோப் இல்லாமல் டூப் போடாமல் நடித்த விஜயகாந்த்…!!! பல வருடங்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்…!!! எந்த காட்சி தெரியுமா..?

vijaykanth risk fight sequence in sethupathi ips

கேப்டன் விஜயகாந்த் பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் நாம் அறிந்துள்ளோம் ஆனால் சில விஷயங்கள் அவருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வகையில் இந்த விஷயம் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலமாக வெளிவந்துள்ளது.

கேப்டன் விஜயகாந்த் எந்த ஒரு படத்தில் நடித்தாலும் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுப்பாராம் விஜயகாந்த் முதன் முதலாக தமிழில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் உங்களுக்கு உச்சரிப்பு சரியில்லை என்று அவரை அந்தப் படத்தை விட்டு நீக்கிவிட்டு அவர் கண்முன்னே வேறொரு நடிகரை அதே படத்தில் நடிக்க வைத்தார்களாம். மனம் நொந்து போன விஜயகாந்த் எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து சில படங்களில் நடித்து வந்தாராம்.

விஜயகாந்த் நடித்து வரும் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்ததால் விஜயகாந்துக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க முன் வந்தார்களாம் குறிப்பாக விஜயகாந்த் நடித்த படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாகும் குடும்பங்களை கவரும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளதாகவும் இருந்ததால் அந்த நேரத்தில் மக்கள் பெரிய ஆதரவை அவரது படத்திற்கு கொடுத்து வந்தனர்.

தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் 1994ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று விஜயகாந்துக்கு பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மணி கூண்டில் ஏறி அதில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டை எடுத்து அதனை செயல் இழக்க செய்வார் அந்த காட்சிக்கு ரசிகர்கள் விசிலடித்து ரசித்துப் பார்த்தார்கள்.

அந்த அளவிற்கு சுவாரசியமாகவும் விறுவிறுப்புடனும் அந்தக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் கிளைமஸ் அந்த காட்சியில் விஜயகாந்த் ரிஸ்க் என்று தெரிந்தும் டூப் ஏதும் போடாமல் ரோப் இல்லாமல் நடித்து அசத்தி இருந்தாராம் இதனை ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில் என்னுடைய தாத்தா சரவணன் அவர்கள் விஜயகாந்த் சாரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தைப் பற்றி தத்தா சொன்னாங்க. விஜயகாந்த் ரோப் மற்றும் டூப் இல்லாமல் தாமாக முன் வந்து நடித்தார் சேதுபதி ஐ பி ஸ் படத்தில் இந்த கிளைமாக்ஸ் கட்சியில் நடித்தாராம்.

அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்க கூடிய மனிதராம். மணிக்கூண்டு கோபுரத்தில் இந்த காட்சி பார்வையாளர்களை பெரிய அளவில் கவர்ந்திச்சாம்.

Exit mobile version