Home NEWS நாமெல்லாம் விமானத்துல பறப்போம் … ஆனா இவருக்கு வீடே விமானம்தான்…கூலி தொழிலாளியின் விடாமுயற்சி …!!!

நாமெல்லாம் விமானத்துல பறப்போம் … ஆனா இவருக்கு வீடே விமானம்தான்…கூலி தொழிலாளியின் விடாமுயற்சி …!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் விமானப்பயணம் சர்வசாதாரணம் என்று பலர் கூறினாலும் , விமானம் பறக்கும் சத்தத்தை கேட்டு அண்ணாந்து பார்க்கும் மக்களுக்கு தான் தெரியும் விமான பயணத்தின் அருமை. இன்னும் வரை பலர் ஒருமுறையாவது விமானத்தில் பயணித்திட மாட்டோமா என்று ஏங்கி தான் உள்ளனர்.

இவ்வாறு ஏக்கம் மட்டும் பத்தாது அதை நாமதான் முயற்சி செய்து முடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்த கூலித் தொழிலாளியின் கதை தான் பின்வருமாறு.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த போவ் என்ற தொழிலாளி விமானத்தை வீடாக கட்டியுள்ளார் .

கம்போடியா நாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் சிறுக சிறுக சேமித்து விமானம் போன்று ஒரு வீட்டை கட்டி உள்ளார். விமானத்தில் உள்ளது போலவே வீரர் எஞ்சின், இறக்கை போன்ற அனைத்தும் அப்படியே உள்ள மாதிரியே கட்டி உள்ளார் .

இதுகுறித்து அவர் பேட்டி அளிக்கையில் சிறு வயதிலிருந்து விமானத்தில் போக வேண்டும், பறக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஆனால் அதற்கு என்னிடம் பணம் இல்லை. 30 வருடமாக இதற்காக சேமித்து இந்த வீட்டை நான் தற்பொழுது கட்டி உள்ளேன். இன்னும் வீட்டில் கட்டிட பணிகள் உள்ளன.

தற்பொழுது இதனை பார்க்க பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து போகின்றன. இதனால் தனது வீட்டில் பக்கத்திலேயே காபி கடை ஒன்றை ஓபன் செய்துள்ளேன். இதன் மூலமும் எனக்கு வருமானம் வருகிறது என்று கூறியுள்ளார்.

Exit mobile version