Home CINEMA NEWS இதற்கு தான் முதல்வரை சந்தித்தாரா விஜய்.? பீஸ்ட் படம் குறித்து சர்ச்சையை கிளப்பும் ப்ளூ சட்டை...

இதற்கு தான் முதல்வரை சந்தித்தாரா விஜய்.? பீஸ்ட் படம் குறித்து சர்ச்சையை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்.

bluesattai maran

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் அரபி குத்து ஜாலியோ ஜிம்கானா மற்றும் திரை தீ பிடிக்கும் பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது.

அதனை தொடர்ந்து வந்த பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார். திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யை நெல்சன் ட்ரீட்மென்ட்ல் பார்க்கும் போது பயங்கர வித்தியாசமாக இருந்தது பீஸ்ட் ட்ரைலர் படத்தின் கதைப்படி RAW ஏஜெண்டாக வரும் விஜய் மாலில் சிக்கிக்கொண்ட மக்களை எப்படி பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு தனது வழக்கமான பாணியை விட்டு விட்டு புதிய பாணியில் நடித்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இதனிடையே சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய் சந்தித்து கைகுலுக்கி நீண்ட நேரம் பேசி உள்ளனர். இந்த சந்திப்பு குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ப்ளூ சட்டை மாறன், தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் புதுச்சேரியில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை 3 மடங்கு வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான செய்தியை பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்து இதற்குத்தானா? சினிமா ரசிகர்கள் கேள்வி என்று பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version