Home NEWS துப்பாக்கியால் சுட்டு கொரோனவை விரட்ட முயற்சி செய்த உ.பி. பாஜக பிரமுகர்…!!! இதல்லாம் எங்க...

துப்பாக்கியால் சுட்டு கொரோனவை விரட்ட முயற்சி செய்த உ.பி. பாஜக பிரமுகர்…!!! இதல்லாம் எங்க போய் முடிய போகுதோ மக்கள் புலம்பல்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒரு பக்கம் சிறப்பாக நடந்து கொண்டு இருக்க இந்தியாவின் ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்கு அணைத்து அகல் விளக்கினை ஏற்ற சொல்லி மக்களிடம் கோரிக்கை வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா முழுவதும் விளக்கினை ஏற்றி அதனை புகைப்படங்களாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். பிரபலங்கள் அனைவரும் ட்விட்டரில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் ஒரு படி மேல் போகி GO BACK CORONA என்று கோஷமிட்டு நேற்று ஊர்வலம் சென்றுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வெடி வெடித்து கொண்டாடினர்.

மொட்டை போட்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் புகைப்படங்கள் உள்ளே.

உத்தரபிரதேச பாஜக பிரமுகர் மஞ்சித் திவாரி ஒரு படி மேல் சென்று அகல் விளக்கினை ஏற்றி கைதுப்பக்கியை கையில் எடுத்து வானத்தை பார்த்து சுட்டார். அவர் அருகில் இருந்த உறவினர்கள் உற்சாகத்தில் முழக்கமிட்டனர்.

Exit mobile version