Home NEWS பெரிய சங்கி அமித்ஷாவின் புதிய உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என கலாய்த்த பாஜக செந்தில்வேல்…!!!

பெரிய சங்கி அமித்ஷாவின் புதிய உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என கலாய்த்த பாஜக செந்தில்வேல்…!!!

Amit shah

பெரிய சங்கி அமித்ஷாவின் புதிய உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பேசியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சர் ஆனதையடுத்து புதிய மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நாளை 16ஆம் தேதி சென்னையில் பதவியேற்க உள்ளார். அதற்காக நேற்று காலை கோவையில் யாத்திரை தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று வரவேற்ப்பை பெற்று சென்னை செல்கிறார். அதன்படி நேற்று திருப்பூருக்கு வந்த அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு அண்ணாமலை பேசியதாவது முன்னர் பாஜகவிற்கு தமிழ்நாடு தேவைப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டுக்கு பாஜக தேவைப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகள் கடுமையான பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் இவ்வாறு பேசினார். முன்னதாக பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேசுகையில் பாஜகவினரை சங்கிகள் என்று கூறினார்கள். அமித்ஷா என்னும் பெரியசாமியின் புதிய உற்பத்தி தான் சின்ன சங்கி அண்ணாமலை என்றார். அவர் இவ்வாறு பேசியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version