Home NEWS பச்சைக் கிளிகளை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து கடத்திய கொடூரம்..!! கையும் களவுமாக சிக்கிய கப்பல்..!!

பச்சைக் கிளிகளை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து கடத்திய கொடூரம்..!! கையும் களவுமாக சிக்கிய கப்பல்..!!

ஆசியாவிலேயே மிக அதிக அளவில் அழிந்து வரும் பறவை இனங்களுக்கு புகலிடமாக இந்தோனேசியா இருக்கிறது. இங்குதான் சட்ட விரோதமாக பறவைகள் வர்த்தகமும் அதிகமாக உள்ளது. உள்ளூரில் உள்ள பெரும் பறவை சந்தைகளில் பறவைகள் விற்கப்படுவது வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

துறைமுக நகரான ஃபக்பக்கில் வியாழக்கிழமை காலை இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை.

அந்தக் கப்பலில் அசாதாரண சத்தம் கேட்டதை அடுத்து பெட்டிக்குள் விலங்குகள் இருப்பதாக கப்பலில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட பறவைகள் நியூகினி மற்றும் தென்மேற்கு பசிபிக் தீவுகளில் காணப்படும் பகுதியை சேர்ந்த கிளிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Exit mobile version