Home NEWS பரவி வரும் பறவை காய்ச்சல் ..!!! கோழி மற்றும் வாத்து கறி சாப்பிட்டால் ஆபத்தா..? உலக...

பரவி வரும் பறவை காய்ச்சல் ..!!! கோழி மற்றும் வாத்து கறி சாப்பிட்டால் ஆபத்தா..? உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்.

bird flu spreads in india

கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. H5 N 1 எனப்படும் இந்த வைரஸ் கோழி மட்டும் வாத்துகளை தாக்குமாம்.

பறவை காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்துள்ளன இதை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது .

பறவை காய்ச்சலால் கோழி வாத்துக்கள் விற்பனை சரிந்துள்ளது அவற்றை சாப்பிட மக்கள் அச்சத்துடன் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது என்ன என்றால் கோழிக்குஞ்சு, கோழி, வாத்து போன்றவற்றை சாப்பிடும் முன்பு அவற்றை தூய்மையான முறையில் முறையாக தயாரித்து நன்கு வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

வெப்பத்தால் இந்த வைரஸ் அழியும் தன்மை இல்லாது என்பதால் உணவை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் வேக வைப்பதன் மூலம் உணவில் உள்ள கிருமி அழியும்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவை அல்லது இறந்த பறவைகளை கவனமாக கையாள வேண்டும் .

பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக இதனை நாம் பின்பற்றுவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Exit mobile version