Home CINEMA NEWS பிக்பாஸ்ஸில் ஒலிக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தகாரர் இவர் தானாம்..!!! முதல் முதலாக புகைப்படத்துடன் வெளியான...

பிக்பாஸ்ஸில் ஒலிக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தகாரர் இவர் தானாம்..!!! முதல் முதலாக புகைப்படத்துடன் வெளியான தகவல்.

biggboss voiceover sachithanantham

பிக்பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடக்கும் பிக்பாஸ் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது.

முதலில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக்பாஸ் அதன்பின் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து இரு போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது. அதன்பின் வாரம் ஒருவரை ஏவிக்சன் செய்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை கமலஹாசன் தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் பிக்பாஸ்சில குரல் கொடுப்பது யார் என்பது இன்று வரை வெளிவராத ரகசியமாகவே இருந்தது.

உதாரணத்துக்கு பிக்பாஸ் அவரது குரலில் அனிதா நீங்க கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க என்று அவர் கூறும் அந்த குரல் கணீரென்று இருக்கும். நல்ல குரல்வளம் கொண்ட அந்த நபர் யார் என்று தெரிந்துகொள்ள மக்கள் நீண்ட வருடங்களாக ஆர்வத்துடன் இருந்தனர்.

serial actor amit

பிக்பாஸ் குரல் கொடுப்பது சீரியல் நடிகர் அமித் என்று கூறிவந்தார்கள் இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு நான் குரல் கொடுத்தது உண்மைதான் ஆனால் தமிழ் பிக்பாஸ்க்கு இல்லை ஒரு தடவை கன்னட பிக்பாஸ் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வருபவர் யார் என்று தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வருபவர் ஒரு பாலிவுட் நடிகர் அவருடைய பெயர் சச்சிதானந்தம் இவர் குரல் கொடுப்பவர் மட்டுமல்ல ஹிந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version