Home CINEMA NEWS பிக்பாஸ் நமீதா மாரிமுத்தா இது.? வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் நமீதா மாரிமுத்தா இது.? வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்…!!!

namitha marimuthu

போட்டோ ஷூட் மூலம் நமிதா மாரிமுத்து அம்மன் கெட்டப்பில் உள்ள போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் நமிதா மாரிமுத்து. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

நமிதா மாரிமுத்து ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த சீசன்களை காட்டிலும் இது வரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் சீசன் 5 முதல்முறையாக திருநங்கை போட்டியாளராக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

பிக் பாஸ் வீட்டில் ஒரே வாரம் இருந்தாலும் தனது கதை மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். நமிதா மாரிமுத்து இவருடைய கதை கேட்டு பலரும் கண்ணீர் வடித்தனர். பிக் பாஸ் வீட்டை விட்டு தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா மாரிமுத்து வெளியேறினார்.

இதிலிருந்து ஏன் விலகினார் என்ற காரணம் இதுவரை வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நமிதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். தற்போது மழையில் உணவில்லாமல் தவித்த மக்களுக்கு சமூக அக்கறையோடு உணவுகளை வழங்கி உதவி செய்தார் நமிதா மாரிமுத்து.

தற்போது ஆதிபராசக்தி வேடத்தில் தத்ரூபமாக இருக்கும் விடீயோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அதோடு காலண்டரில் இருக்கும் அம்மாவைப் போல் அச்சு அசல் அம்மன் ஆகவே காட்சியளிக்கிறார் நமிதா மாரிமுத்து.

மேலும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கைகூப்பி உள்ள எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Exit mobile version