Home CINEMA NEWS பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிஷா..!!! ஆரத்தி எடுத்து வரவேற்றிய அவரது குடும்பத்தினர் வீடியோ உள்ளே.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிஷா..!!! ஆரத்தி எடுத்து வரவேற்றிய அவரது குடும்பத்தினர் வீடியோ உள்ளே.

aranthangi nisha

நிஷா விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார். ஆரம்பத்தில் நிஷாவின் சென்டிமென்ட் பேச்சினால் ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைத்தார். விஜய் டிவியின் தொகுப்பாளர் ரியோ மீது அளவு கடந்த பாசத்தை காட்டினார் நிஷா.

நிஷா என்னுடைய தம்பி ரியோ என்று கூறும்போது இவனுங்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு என்று ரசிகர்கள் வெளியில் பேசத் தொடங்கினார்.

பிக்பாஸ் சீசன் 4 நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் வந்து கலந்து கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனா அடிக்கடி நிஷாவிற்கு ரியோவிற்கும் சப்போர்ட் செய்து கொண்டு விளையாடி வந்தார்.

கருப்பாக இருப்பதால் பட்ட அவமானங்கள் பற்றி கூறிய நிஷா ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றார். அதன்பின் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தனர் ஆனால் அன்பு GANG என்று உருவாக்கிக்கொண்டு ரியோ,நிஷா,அர்ச்சனா அடித்த லூட்டி தாங்க முடியாமல் இருந்தது. அந்த அணியில் இருந்து ஒருவரை தூக்க வேண்டும் என்பதற்காக நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார்.

nisha with husband

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிஷா தனது குடும்பத்தினரால் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு வீட்டுக்குள் நுழையும் போது அவரது மகன் ஓடிப்போய் நிஷாவை கட்டிப்பிடித்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Exit mobile version