Home CINEMA NEWS திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காவல்நிலையத்தில் புகார்...

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பிக்பாஸ் ஜூலி…!!!

julie

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது நடிகை ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு சமரசம் செய்து அனுப்பினர். சென்னை பரங்கிமலை ஐரோப்பியன் லோன் பகுதியை சேர்ந்தவர் நடிகை மரியா ஜூலியானா 26. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் புகழ் பெற்றவர். இதுதவிர அம்மன் தாய் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியை சேர்ந்தவர் மணிஷ் 29 கடந்த 2017 அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் உள்ள ஒரு சலூனில் இரண்டு பேரும் வேலை செய்தனர். ஒரே இடத்தில் வேலை செய்ததால் இவர்கள் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் பீச், பார்க், சினிமா என பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். மேலும் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜூலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷை வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர் மழுப்பலான பதில் கூறி வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை ஜூலி காதலன் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த மகளிர் போலீசார் காவல் நிலையத்திற்கு மணிஷ் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நாங்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு நடிகையை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே ஜூலியுடன் காதலை முடித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதை அடுத்து ஜூலி நாங்கள் காதலித்த போது அவருக்கு இரண்டு சவரன் தங்கச் சங்கிலி, பைக் வாங்கி கொடுத்தேன். அவற்றை மீட்டுத்தர வேண்டும். அவரிடம் இனிமேல் எனக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என உத்திரவாதம் வாங்கி தரவேண்டும் என்று தெரிவித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் சாந்தா தேவி மணிஷ் இடமிருந்து அவற்றை வாங்கி அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் இருவரிடமும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version