Home CINEMA NEWS விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் பீஸ்ட் படத்தின் மாஸ் அப்டேட்…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் பீஸ்ட் படத்தின் மாஸ் அப்டேட்…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

beast

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என இரண்டு பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. இப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று நெல்சன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நாளை என்ற வாசகத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

இதனால் பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளிவரப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இன்று பீஸ்ட் படத்தின் டிரைலர் அல்லது டீசர் எப்போது வெளியாகும் என தகவல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version