Home NEWS வட மாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா…!!! நம்பி வந்த தொழிலாளர்களை பெருமைப்படுத்திய செங்கல் சூளையில் முதலாளி.

வட மாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா…!!! நம்பி வந்த தொழிலாளர்களை பெருமைப்படுத்திய செங்கல் சூளையில் முதலாளி.

தென்காசி அருகே செங்கல் சூலையில் பணியாற்றும் வட மாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா கோலாக்கலமாக நடந்தது. தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 100க்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடையம் அருகே வடக்கு மடத்தூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவரது செங்கல் சூலையில் கொல்கத்தாவை சேர்ந்த ஏழு குடும்பத்தினர் தங்கி வேலை செய்கின்றனர். இவர்களில் பொறி – தோனியம்மா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது தோனியம்மா ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த சொந்த ஊர் சென்றுவர செலவு அதிகமாகும். மேலும் தற்போதைய நிலையில் ஊருக்கு சென்றால் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியை நம்பி சொந்த ஊரு சென்றதாக கூறி விடுவார்கள். எனவே இங்கு வேலை செய்யும் உறவினர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என செங்கல் சூளை உரிமையாளர் பாலமுருகன் தெரிவித்து அவரே ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி தோனியம்மாளுக்கு நேற்று முன்தினம் வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் கடையம் கோவிந்த பேரி மாதாபுரம், முக்கூடல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்யும் தோனியம்மாவின் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சடங்கு படி வளைகாப்பு விழாவும் கறி விருந்தும் நடைபெற்றது. அப்போது வடமாநில பெண்கள், ஆண்கள் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து தோனியம்மாவின் கணவரான வட மாநில தொழிலாளி பொறி கூறுகையில் எங்கள் ஊரில் உள்ளது போல் இங்கு மிகவும் சந்தோஷமாக ஆட்டம் பாட்டத்துடன் வளைகாப்பு விழா கொண்டாடினோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது இங்கு நடந்த வளைகாப்பு விழா வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் என்றுமே பாதுகாப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் சிறந்ததாக தொழிலாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Exit mobile version