Home CINEMA NEWS அட்லி- பிரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தது..!! என்ன குழந்தை தெரியுமா..? குவியும் வாழ்த்துக்கள்..!!

அட்லி- பிரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தது..!! என்ன குழந்தை தெரியுமா..? குவியும் வாழ்த்துக்கள்..!!

தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. நயன்தாரா பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த போது ரீஎண்ட்ரி கொடுப்பதற்காக தேர்ந்தெடுத்த படம் இயக்குனர் அட்லியின் ராஜா ராணி படம்.

இது இயக்குனர் அட்லிக்கு முதல் படம் போல் இல்லை என்று அனைவராலும் பராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி பல வெற்றி படங்களை தந்தார், தொடர்ந்து விஜய் உடன் மூன்று படங்கள் இயக்கி உள்ளார். தற்பொழுது ஹிந்தியில் ஜாம்பவான் ஷாருக்கான் வைத்து படம் இயக்கி உள்ளார். அந்த படமும் தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி சின்னத்திரையில் சீரியலில் நடித்து வந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் பிரியா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிவித்தார். கூடவே வளைகாப்பும் கோலாகலமாக நடந்தது. வளைகாப்பில் தளபதி விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

தற்பொழுது பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என அட்லி தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version