Home CINEMA NEWS விஜயின் பிறந்தநாளிற்கு வாழ்த்து சொல்லிய ஆர்யாவின் மனைவி சயீஷா..!!! விஜயுடன் சயீஷா எடுத்து கொண்ட புகைப்படம்...

விஜயின் பிறந்தநாளிற்கு வாழ்த்து சொல்லிய ஆர்யாவின் மனைவி சயீஷா..!!! விஜயுடன் சயீஷா எடுத்து கொண்ட புகைப்படம் உள்ளே.

sayyesha

சயீஷா தமிழ் சினிமாவில் “வனமகன்” என்ற படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை AL விஜய் இயக்கினார். அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்ததோ இல்லையோ சயீஷாவின் நடனம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. அந்த அளவு உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நடனம் ஆடும் அளவிற்கு இருந்தது அவரது நடனம்.

தமிழ் சினிமாவில் நடனம் ஆட தெரிந்த நடிகைகள் மிக குறைவான இந்த நேரத்தில் சயீஷாவின் நடனம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. வனமகனை தொடர்ந்து “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் கமிட் ஆனார். ஆர்யாவுடன் “கஜினிகாந்த்” என்ற படத்தில் நடித்தார் இந்த படத்தின் மூலம் தான் ஆர்யா – சயீஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சயீஷா சூர்யாவிற்கு ஜோடியாக “காப்பான்” என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் ஆர்யாவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று சயீஷா AL விஜயுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் உலகின் சிறந்த சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! என்று புகழாரம் சூடி உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version