Home CINEMA NEWS நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன் – படப்பிடிப்பில் நடந்தது என்ன?

நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன் – படப்பிடிப்பில் நடந்தது என்ன?

கடந்த வாரம் மும்பை ஃபிலிம் சிட்டியில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் தனது இசைக் குழுவினருடன் பாடல் படபிடிப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் கிரேன் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட மின்விளக்குகள் மேடையில் நடுவே விழுந்து விபத்துக்குள்ளானது. மேடையில் இருந்த கலைஞர்கள் சுதாரித்துக் கொண்டதால் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதைப் பற்றி அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று நான் பாதுகாப்பாகவும். உயிருடனும் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நல விரும்பிகளுக்கும் எனது ஆன்மீக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன். என்றும் நல்ல வேலையாக இந்த விபத்தில் எல்லோரும் எந்தவித காயமும் இன்றி உயிர்த்தப்பினர்.

இருப்பினும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு ஏ ஆர் ரகுமான் ‘அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்’ எனக் கூறியுள்ளார் அதோடு அமீரின் சகோதரி ரஹீமா ரகுமான் ‘இதை இறைவனின் அருள் தம்பி’ உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கூறியிருந்தார்.

இது குறித்து ரகுமான் கூறுகையில் சில நாட்களுக்கு முன் எனது மகன் அமீன் மற்றும் அவரது ஸ்டைலிங் குழுவினர் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பி உள்ளனர். மும்பை பிலிம் சிட்டியில் நடந்த இந்த விபத்தில் இறைவன் அருளால் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

நாம் நமது தொழில் துறையை வளர்க்க கொண்டிருக்கும் இந்த வேலையில் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பாதுகாப்பை நிச்சயம் உலக தரம் வாய்ந்ததாக மேம்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version