Home CINEMA NEWS பீஸ்ட் அரபிக் குத்து பாடலில் விஜயுடன் ஆடிய பூஜா ஹெக்டேவை விடுங்க…!!! இவங்கள கவனிச்சீங்களா என்ன...

பீஸ்ட் அரபிக் குத்து பாடலில் விஜயுடன் ஆடிய பூஜா ஹெக்டேவை விடுங்க…!!! இவங்கள கவனிச்சீங்களா என்ன ஒரு அழகு…!!!

beast arabic kuthu singer jonita gandhi

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து பாடல் நேற்று மாலை 6 மணிக்கு காதலர் தின விருந்தாக வெளிவந்தது வெளியான சில மணி நேரங்களிலேயே பல ரெக்கார்டுகளை வைத்து பாடல் அனைவரையும் கவர்ந்தது. அந்த ட்யூன் மற்றும் விஜய்யின் நடன அசைவுகள் தான் பாடலுக்கு பெரிய பிளஸ் அதற்குப் பின் அனைவரும் கவனிக்க வைத்தது பாடகி ஜொனிதா காந்தி அவர்களை தான்.

ஜொனிதா காந்தி தமிழ் தெலுங்கு ஹிந்தி பஞ்சாபி போன்ற மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் மன மன மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி பிரபலமடைந்த ஜொனிதா காந்தி அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக அனிருத் இசையில் இவர் பாடிய டாக்டர் படத்தில் இடம்பெற்றிருந்த செல்லமா பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. அதனை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார்.

நேற்று வெளியான வீடியோவில் அனிருத்தும் ஜொனிதா காந்தி பாடும் காட்சிகள் வரும் போது அடடா படத்தின் நாயகி பூஜா ஹெக்டே அவர்களை ஜொனிதா காந்தி அழகாக இருக்கிறாரே என்று உற்று நோக்கி ரசித்த ரசிகர்கள் பலர். அந்த அளவிற்க்கு பாடிக்கொண்டே எஸ்ஸ்ப்ரஷன்களை அள்ளிவீசினார்.

விரைவில் ஜொனிதா காந்தி சினிமாவில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.

Exit mobile version