Home CINEMA NEWS தீபாவளி கொண்டாட காத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் “வா சாமி” அண்ணாத்த பாடல் வெளியீட்டு…!!! கொண்டாட்டத்தில்...

தீபாவளி கொண்டாட காத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் “வா சாமி” அண்ணாத்த பாடல் வெளியீட்டு…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

annathe

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நான்காவது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் நெட்வொர்க் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எந்திரன், பேட்ட ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் இணைந்துள்ள மூன்றாவது படம் அண்ணாத்த ஏற்கனவே எந்திரன், பேட்ட ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியால் இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக டி.இமான் இசையில் விவேகா எழுதிய “அண்ணாத்த அண்ணாத்த வாரேன், அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு” என்ற பாடல் கடந்த 4ஆம் தேதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல் வரிகளுக்கான வீடியோவில் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றிய காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் வைரல் ஆனது.

தொடர்ந்து அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் கடந்த 9ஆம் தேதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி.இமான் இசையில் யுகபாரதி எழுதிய “சாரல் காற்று” என்ற பாடலை சித்ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நயன்தாரா தோன்றிய ஆடிப் பாடியும் காட்சிகள் இணையதளத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மனதை கொள்ளை கொள்ளும் மெலடி பாடலாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் மூன்றாவது பாடல் கடந்த 18-ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இமான் இசையில் மணி அமுதவன் எழுதிய இப்பாடலை ஆண்டனி தாசன், வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். “மருதாணி சிவப்பு சிவப்பு” என்ற பாடல் ரசிகர்களை கவரும் துள்ளலாக பாடலாக அமைந்துள்ளது. இதில் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை திரைப்படத்தின் நான்காவது பாடல் நேற்று மாலை 6 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

டி. இமான் இசையில் அருள் பாரதி எழுதிய “வா சாமி” என்ற பாடலை முகேஷ் முகமது நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் இணைந்து பாடியுள்ளனர். இதில் ரஜினிகாந்த் ஆக்ரோஷமான தோற்றத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். பாடலுக்கான லிங்கை ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். அந்தப் படத்தின் முதல் மூன்று பாடலைப் போலவே நான்காவது பாடல் யூ டியூபில் வைரல் ஆகியுள்ளது. தற்போது ரசிகர்கள் 4 பாடலையும் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version