Home NEWS ஆடு மேய்த்த 62 வயது பாட்டி நஞ்சம்மாக்கு கிடைத்த தேசிய விருது…!!! பாஜக மாநில தலைவர்...

ஆடு மேய்த்த 62 வயது பாட்டி நஞ்சம்மாக்கு கிடைத்த தேசிய விருது…!!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று வாழ்த்து..!!! சுவாரசிய சம்பவம்.

play back singer nanjamma wins national award 2022

தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப்போற்று படத்திற்கு 5 விருதுகள் கிடைத்ததை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் அதேபோல சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்ற நஞ்சம்மா அவர்களை இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் காரணம் 62 வயதான பாட்டி நஞ்சம்மா அவர்கள் அய்யப்பனும் கோஷியும் படத்தில் களக்காத்த பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ளார்.

கிராமத்தில் ஆடு மேய்த்து வரும் நெஞ்சம் மாணவர்கள் தமிழ்நாடு கேரள எல்லையான அட்டப்பாடியை சேர்ந்தவர். பழங்குடி இனத்தை சேர்ந்த இவருக்கு தாய்மொழி தமிழ் தானாம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அட்டப்பாடியை கேரளா எடுத்துக்கொண்டது.

அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனர் மட்டும் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் தான் நஞ்சம்மாவிற்கு பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார்கள் ஆனால் அய்யப்பன் கோஷியும் படத்தை எடுத்த இயக்குனர் சச்சி 18 ஜூன் 2020 ஆம் ஆண்டு 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் .

அவருடைய நினைவோடு இந்த விருதை வாங்கிக் கொள்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் நஞ்சமா. இது ஒருபுறமிருக்க இன்று பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நஞ்சமா அவர்களை நேரில் சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை அவர்கள் நஞ்சமா பாட்டியிடம் என் பேரு அண்ணாமலை பாட்டி நான் போலீசா இருந்து மாவட்ட எஸ்பி ஆகவும் இருந்து இப்போது பிஜேபில தமிழ்நாட்டில் இருக்கேன் என்று கூறிய அவர் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் எனக்காக அந்த பாடலை பாட முடியுமா என்று பாட்டியிடம் கேட்ட புன்சிரிப்புடன் அந்த பாட்டில் அழகாக அந்த பாடலை பாடி காட்டியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version