Home CINEMA NEWS முதல் முதலாக சூப்பர்ஸ்டாருடன் சேர்ந்து நடித்த அஜித்தின் மகள்..!!! வெளியான வீடியோ..!!!

முதல் முதலாக சூப்பர்ஸ்டாருடன் சேர்ந்து நடித்த அஜித்தின் மகள்..!!! வெளியான வீடியோ..!!!

ajith daughter anikha surendran

விஸ்வாசம் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். அந்தப் படத்தில் இவருடைய நடிப்புக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.

அந்த அளவிற்கு அஜித்திற்கு மகளாக இயல்பாக நடித்திருப்பார். செயற்கைத்தனம் இல்லாத இவரது நடிப்பு பலரை கவர்ந்தது. குறிப்பாக கண்ணான கண்ணே என்ற பாடல் ஒலிக்கும் போது இவருக்கும் அஜித்திற்கும் உள்ள தந்தை மகளின் உறவு காட்டிய விதம் மிக அருமையாக இருந்தது.

அனிகா ஏற்கனவே அஜீத்தின் மகளாக என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடலில் அஜித்தும் அனிகாவும் தந்தை மகளாகவே வாழ்ந்திருப்பார்கள்.

அஜித்துடன் இரண்டு படங்கள நடித்து முடித்த பின் இவருக்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நயன்தாராவைப் போலவே ஹேர் ஸ்டைல் மாற்றி போட்டோசூட் வெளியிட்டு வந்தார் அனிகா சுரேந்திரன்.

தற்பொழுது விளம்பரப் படங்களில் நடித்து வரும் அனிகா சுரேந்திரன் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுடன் சேர்ந்து தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அஜித்தின் மகளாக நடித்திரந்தாலும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version