Home CRIME NEWS முகக்கவசம் அணிய சொன்னதால் பெண்ணை இரும்பு கம்பியினால் தாக்கிய ஆந்திர அரசு ஊழியர் வெளியான CCTV...

முகக்கவசம் அணிய சொன்னதால் பெண்ணை இரும்பு கம்பியினால் தாக்கிய ஆந்திர அரசு ஊழியர் வெளியான CCTV கேமரா வீடியோ ..!!!

andra deputy manger

நாடெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திராவில் சில தளர்வுகள் உடன் ஊரடங்கினை கடைப்பிடித்து வருகிறார்கள். பொது இடங்களில் மற்றும் பணியிடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஆந்திர அரசு முன்பே உத்தரவு அறிவித்திருந்தது. முக கவசம் அணிவதால் நோய்த்தொற்று பிறருக்கு பரவாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் முக கவசம் கட்டாயம் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திரா டூரிஸம் DEPUTY MANAGER பாஸ்கர் என்பவர் தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணை இரும்பு கம்பியினால் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. காண்ட்ராக்டில் பணிபுரியும் அந்த பெண் முக கவசம் அணிந்து வருமாறு ஆந்திர பிரதேஷ் டூரிசம் டெபுடி மேனேஜர் பாஸ்கரிடம் கூறியிருக்கிறார் .

அதற்காக கோபமடைந்து இரும்புக் கம்பியினால் அந்த பெண்ணைத் தாக்கி இருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை அடிக்கும்போது சக பணியாளரான மற்றொரு பெண் அந்த அறையைவிட்டு வெளியே வருகிறார். அங்கு வேலை செய்யும் சக ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் நெல்லூர் மாவட்டத்தில் நடந்தது என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை அடித்த நபர் உடனடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Exit mobile version