Home CINEMA NEWS BEAST படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சன் பற்றி அழகிரி அவர்களின் மகன் என்ன கூறி உள்ளார்...

BEAST படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சன் பற்றி அழகிரி அவர்களின் மகன் என்ன கூறி உள்ளார் தெரியுமா…!!!

dhayanidhi alagiri about beast movie

தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் . வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. விஜய் ரசிகர்களே இன்னும் படம் நன்றாக எடுத்திருக்கலாம் நெல்சன் சரியாக பயன்படுத்தவில்லை அதுபோல நகைச்சுவையும் படத்தில் சுத்தமாக இல்லை என்று கூறி வந்தார்கள்.

முதல் நாளே கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் விஜய் படத்தை பார்ப்பதற்காக தியேட்டரை நோக்கி குடும்பங்கள் படையெடுத்தனர் படத்தை பார்த்துவிட்டு நன்றாகத்தான் இருக்கிறது என்று பேட்டி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு அழகிரி அவர்களின் மகன் தயாநிதி அழகிரி அவர்கள் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில் நான் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை தியேட்டருக்கு செல்லும் முன் படித்தேன்.

உண்மையாக தளபதி விஜயின் ரசிகனாக எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. நெல்சன் விஜயை ஸ்டைலிஷாக காட்டியிருந்தார். அனிருத் மியூசிக் நன்றாக இருந்தது. அது போல விடிவி கணேஷ் நன்றாக நடித்திருந்தார். படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் நன்றாக ஒளிப்பதிவு செய்திருந்தார் என்று கூறியுள்ளார் தயாநிதி அழகிரி.

தயாநிதி அழகிரி CLOUD NINE ARTS என்ற பட நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தவர். பல வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version