Home CINEMA NEWS வலிமை படத்தின் சண்டைக்காட்சி இந்த படத்தின் அப்பட்டமான காப்பியா…!!! வெளியான வீடியோ அதிர்ச்சியில் ரசிகர்கள்.

வலிமை படத்தின் சண்டைக்காட்சி இந்த படத்தின் அப்பட்டமான காப்பியா…!!! வெளியான வீடியோ அதிர்ச்சியில் ரசிகர்கள்.

ajithkumar valimai movie stunt scene copied from hollywood movie

அஜித்தின் வலிமை முதல் நாளே கலவையான விமர்சனங்களை சந்தித்தது முதல் பாதி அதகளம் செய்திருந்த H VINOTH இரண்டாம் பாதியை இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் என்று விமர்சனங்கள் வந்தது ஆனால் விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கினார்கள் குடும்ப ரசிகர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.

படம் பார்த்த COMMON AUDIENCE படம் நன்றாகத்தானே இருக்கிறது அருமையாக அஜீத் நடித்துள்ளார் நல்ல கதை நல்ல மெசேஜ் சொல்லியிருக்காங்க என்று படத்தை ஆகா ஓகோ என்று புகழ ஆரம்பித்தர்கள்.

வலிமை திரைப்படமும் சில நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வந்தது. படத்தை டிஸ்ட்ரிபூட் செய்த டிஸ்ட்ரிபியூட்டர்கள் வலிமை பெரிய லாபத்தை தந்து உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகளை பதிவு செய்தார்கள். வலிமை திரைப்படம் 200 கோடியை தாண்டியது என்று சிலர் இஷ்டத்துக்கு அடித்துவிட ஒரு சிலர் 400 கோடி என்று அள்ளிவிட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று வீடியோ ஒன்று பரவி வருகிறது. வலிமை படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் அஜித்தின் குடும்பத்தினரை அந்தரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார் வில்லன் கார்த்திகேயா.

இந்த காட்சி அப்படியே ஜாக்கி சான் அவர்களின் நியூ போலீஸ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் இருக்கிறது ஜாக்கிசானின் அந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இயக்குனர் வினோத் அவர்களா இது போன்ற காட்சிகளை வைத்தார் என்று அதிர்ச்சியில் இருக்க விஜய் ரசிகர்கள் ஏன்டா எங்க அட்லீயா கொஞ்சமா டா ஓட்டுனீங்க இப்ப என்ன சொல்லறீங்க என்று கிண்டல் வைத்து வருகிறார்கள்.

Exit mobile version