Home CINEMA NEWS விஜய் அஜித்தை ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு..!!! குவியும் லைக்ஸ்.

விஜய் அஜித்தை ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு..!!! குவியும் லைக்ஸ்.

thala ajith thalapathy vijay rare pictures in mankatha shooting spot

அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் தான் மங்காத்தா. மங்காத்தா படத்தில் அஜித்தின் அசுரத்தனமான நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க முடிந்தது ஒரு நெகட்டிவ் கேரக்டரில் ஒரு மாஸ் ஹீரோவை எப்படி கையாள்வது என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்த வெங்கட்பிரபு கொஞ்சமும் மாஸ் குறையாமல் ரசிகர்களுக்குப் பிடித்த படி வித்தியாசமான கதையை கொடுத்திருந்தார்.

மங்காத்தா அஜித்தின் கேரியரில் பெரிய ஹிட் படமாக அமைந்தது மங்காத்தாவிற்கு பிறகு அஜித்துக்கு பெரிய ஹிட் படம் என்றால் அது விஸ்வாசம் தான்.

அஜித்தை வைத்து மங்காத்தா எடுத்த போது தளபதி விஜயின் வேலாயுதம் படத்தின் சூட்டிங் அருகே அருகே நடந்து கொண்டிருந்ததாம். வேலாயுதம் படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு விஜய் அஜீத்தின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித்தை நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசினாராம்.

அப்போது அவர்கள் பேசிக்கொண்ட போது விஜய் அஜித் என்று ரசிகர்கள் பெரிய அளவில் சண்டை போட்டுக் கொண்டாலும் விஜயும் அஜித்தும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்ததாம். அந்த அளவிற்கு இருவரும் சிரித்து பேசியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் விஜய் அன்பு பரிசாக கடிகாரம் ஒன்றை அஜித்திற்கு கையில் கட்டி விட்டாராம் அந்த கடிகாரத்துடன் அஜித் மங்காத்தா படத்தில் நடித்ததாக தகவல் .

Vijay in Velayudham

அந்த நேரத்தில் அஜித்-விஜய் இருவர் பக்கத்திலும் வெங்கட்பிரபு ஒன்றாக புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டாராம் அந்த புகைப்படத்தை தற்போது வெங்கட் பிரபு சமூக வலை தளத்தில் பதிவிட்டு இன்றுடன் இந்த புகைப்படம் எடுத்து 11 வருடம் ஆகிறது லைப் டைம் புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த அஜித் விஜய் ரசிகர்கள் லைக் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.

Exit mobile version