Home CINEMA NEWS ரசிகர்களின் அன்புக்காக நேபாளத்தில் செஃப் ஆக மாறிய நடிகர் அஜித்…!!! வைரலாகும் வீடியோ..

ரசிகர்களின் அன்புக்காக நேபாளத்தில் செஃப் ஆக மாறிய நடிகர் அஜித்…!!! வைரலாகும் வீடியோ..

நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செஃப் ஆக மாறி சமையல் செய்த நடிகர் அஜித். நடிகர்களில் வித்தியாசமானவர் அஜித். தனக்கான ரசிகர்கள் மன்றத்தை கலைத்தவர் தன்னை தல என அழைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.

சினிமாவுக்கு அழைக்கப்பட்ட அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை துறந்தார். நடிப்பது எனது தொழில். என்னை நடிகனாக மட்டும் பாருங்கள் எனது கட்டவுட் பால் அபிஷேகம் செய்வது எனது படம் வெளியாகும் போது கொண்டாட்டங்களில் ஈடுபடுவது எல்லாம் கூடாது என ரசிகர்களிடம் கறாராக தெரிவித்தார்.

அஜித் நடிப்பை தவிர பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைத்தல் உள்ளிட்ட விஷயங்களை அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். அஜித் தற்போது உலகம் முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஒவ்வொரு இடமாக செல்ல அவர் முடிவு செய்து இருக்கிறார். அதன்படி தற்போது நேபாளத்திற்கு சென்று இருக்கிறார். காட்மண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அஜித் சாப்பிட சென்றார். அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் அவரை அடையாளம் கண்டு அவருடன் செல்பி எடுத்தனர்.

அஜித் சமையல் செய்வதிலும் கில்லாடி. அதனால் தங்களது ஹோட்டலில் ஏதேனும் டிஷ் செய்ய முடியுமா என அவரிடம் ஹோட்டல் மேனேஜர் அன்புடன் கேட்க உடனே அஜித் ஹோட்டலில் சமையல் அறைக்கு சென்று காரமான நூடுல்ஸ் சமைக்க ஆரம்பித்துவிட்டார். இதை அங்கிருந்து அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட சமூகம் வலைத்தளங்களில் இது வைரல் ஆகிவிட்டது.

Exit mobile version