Home CINEMA NEWS இரவு நேர பார்ட்டியில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா தனுஷ்..!!! வெளியான புகைப்படங்கள்.

இரவு நேர பார்ட்டியில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா தனுஷ்..!!! வெளியான புகைப்படங்கள்.

aishwarya-dhanush-attend-night-party

ஐஸ்வர்யா தனுஷ் ரஜினி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள். திருடா திருடி படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மீது அலாதி பிரியம் கொண்ட ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் காதலித்து வந்தார்.

அதன்பின் தனது தந்தை ரஜினிகாந்த் அவர்களிடம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

தன் தந்தையைப் போல சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள 3 என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை அறிமுகப்படுத்தினார் முதல் படத்தின் அத்தனைப் பாடல்களும் அருமையாக அமைந்தது.

முதல் படத்தில் தனது கணவர் தனுஷை ஹீரோவாக நடிக்கவைத்து கமலஹாசன் அவர்களின் மகள் சுருதி அவர்களை ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் பெரிய ஹிட் பாடலாக அமைந்து யூடியூபில் பல சாதனைகள் புரிந்தது. முதல் படமே பெரிய பிரபலத்தை கொடுத்தாலும் முதல் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார் ஐஸ்வர்யா.

3 படத்தில் சேர்ந்து பணியாற்றிய தனுஷ் மற்றும் சுருதிஹாசன் அவர்கள் நெருக்கமாகப் பழக ஆரம்பித்து வெளியிடங்களில் எல்லாம் சுற்றி வந்தனர் என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியது அதனால் ஐஸ்வர்யா அப்செட் ஆனதாகவும் அதன்பின் பஞ்சாயத்து வைத்து அந்த பிரச்சினையை சரி செய்தார்கள் என்றும் அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தது.

அந்தப்படமும் பாடல்கள் பிரபலமான அளவிற்குக் கூட ஹிட் படமாக அமையவில்லை இருந்தாலும் அதனை தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ் அந்தப் படமும் பெரிய அளவில் போகாததால் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வருவதில் கவனம் செலுத்தி வந்தார். தற்பொழுது தனுஷின் அண்ணன் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக உள்ளார்.

ஐஸ்வர்யா ஆயிரத்தில் ஒருவன் என்ற வெற்றிப் படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலை பாடி உள்ளார் அதுமட்டுமல்லாமல் ரீமாசென் அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் டப்பிங் கொடுத்தது ஐஸ்வர்யா தான்.

ஐஸ்வர்யா தனுஷ் தற்பொழுது பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார் இரவு நேர பார்ட்டியில் கலந்துகொண்ட அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

Exit mobile version