Home CINEMA NEWS நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்து கொண்ட விமான பணிப்பெண்!!! வைரலாகும் புகைப்படம்.

நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்து கொண்ட விமான பணிப்பெண்!!! வைரலாகும் புகைப்படம்.

ajith

ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார்.

அஜித் நடிக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நாளை தொடங்க உள்ளது. அதற்காக நடிகர் அஜித் நேற்று விமானம் மூலம் ஹைதராபாத் சென்றடைந்தார்.

விமானத்தில் அவரை சந்தித்த விமான பணிப்பெண் ஒருவர் நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விமான பணிப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நடிகர் அஜித் போன்று ஒரு எளிமையான நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் தான் தமிழ் சினிமாவில் அழகான நடிகர் எனவும் கூறியுள்ளார். அவருடைய எளிமை, அருமையான புன்னகை மற்றும் வசீகர தோற்றம் ஆகியவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று பதிவில் கூறியுள்ளார்.

மேலும் அஜித்துடன் விமானத்தில் பயணித்த பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version