Home NEWS வெளுத்து வாங்க போகும் வெயில், அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடக்கம்…. மக்களே உஷார்!!!

வெளுத்து வாங்க போகும் வெயில், அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடக்கம்…. மக்களே உஷார்!!!

கத்திரி வெயில் என்கின்ற அக்னி நட்சத்திரம் என்று தோன்றுகிறது. வரும் 29ம் தேதி வரை நீடிக்கும். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று வேலூர் மற்றும் நாமக்கலில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.அதே நேரம் பத்து நாட்களுக்கும் மேலாக வெப்பச்சலனம் வளிமண்டலசுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குன்னூரில் 11  செமீ மழை பெய்துள்ளது.இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட நிலையில் காணப்படும். இவற்றில் வெப்ப நிலை அதிகரிக்க படுவதால் வழக்கத்திற்கு மாறாக வியர்வை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது மற்ற மாதங்களை விட அக்னி சித்திரத்தில் வெப்பநிலை அதிகமாகவே காணப்படும்.  நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை கத்திரி வெயில் காலத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும். கத்திரி வெயில் காலத்துக்குப் பின் மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கும். தென் மாவட்டங்களில் மழை பெய்யும். வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

Exit mobile version